கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை

ம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில்  கொரோனா வைரசின் தாக்கத்தால்  போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக  வரும் 14 ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

.

    உலக சுகாதாரக் கழகம் கொரோனா வைரஸை  பெருந்தொற்றுநோய் என அறிவித்துள்ளதால்  உலக நாடுகள் பலவும் இந்நோயிலிருந்து காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக  முக்கிய  விளையாட்டுப் போட்டிகள் பலவும் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்தியாவிலும்  இந்நோயின்  தாக்கம் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது எனவே ஐபிஎல் தரப்பும்  போட்டிகளை நடத்துவது  குறித்து  வரும் 14 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.  நாட்டின்  தற்போதைய  சூழலில் கொரோனாவின் தாக்கம் குறித்து  தீவிரமாக யோசித்து வருகிறோம், எனவே  ஆலோசனைக்  குழுவில் இதுபற்றி விரிவாக ஆராய்ந்து  முடிவெடுக்கப்படும்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.