தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சில சிறிய கட்சிகள், அதாவது, தமக்கான மாநில கட்சி அந்தஸ்தையோ, தனியான சின்னத்தையோ பெறமுடியாத நிலையில் உள்ள கட்சிகள் தேவையில்லாத மிரட்டல்களை நிகழ்த்திக் கொண்டுள்ளன.

தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டுமென்று முரண்டு பிடிப்பதும், பேச்சுவார்த்தைகளை புறக்கணிப்பதும், ஏன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கேட்டால், முக்கிய வேலையிருந்தது என்பதும், தனித்தே அனைத்து தொகுதிகளிலும் களம் காண்போம் என்பதும், பாஜகவை வீழ்த்தவே கூட்டணியில் இருக்கிறோம் என்பதும், சசிகலா மற்றும் மய்ய நடிகரைக் காட்டி மிரட்டுவதும் என்று, அந்த கட்சிகள் சற்று அதிக அலப்பரை காட்டுவதைக் காண முடிகிறது.

நாம், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சில கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பார்த்துவிடுவோம். அதன் அடிப்படையில், அவர்கள் இப்போது செய்யும் அலப்பறைகள் நியாயமானவையா? என்பதை முடிவுசெய்யலாம்.

* மொத்தம் 105 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக – 2.41% வாக்குகள்

* 28 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக – 0.87% வாக்குகள்

* 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ – 0.79% வாக்குகள்

* 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் – 0.72% வாக்குகள்

* 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக – 0.77% வாக்குகள்

* 26 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா – 0.54% வாக்குகள்

* 72 போட்டிகளில் போட்டியிட்ட கொமதேக – 0.39% வாக்குகள்

* திமுக அணியில் 4 இடங்களில் போட்டியிட்ட புதக – 0.51% வாக்குகள்

* திமுக அணியில் 4 இடங்களில் போட்டியிட்ட மமக – 0.46% வாக்குகள்

ஆக, நிலைமை இப்படியிருக்க, இந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேரத்தில், சில கட்சிகள் செய்யும் அலப்பறைகள் சற்று அதிகமாகவே தெரிகிறது அரசியல் உலகில்!