இஸ்லாமிய பாடலை இந்து பாடலாக்குவது மட்டும் நியாயமா?: கிளம்பும் புது சர்ச்சை

“கர்நாடக இசை இந்து மதத்துக்கானது. அதை மாற்றி வேறு மதப்பாடல்களாக பாடக்கூடாது” என்று சர்ச்சை வெடித்துள்ள நிலையில், “இஸ்லாமிய பாடலை மட்டும் இந்து பாடலாக மாற்றிப்பாடலாமா” என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற  இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை கர்நாடக இசையில் புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள்   இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்துவந்தனர்.

மத ரீதியான விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளில் வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு, கிறிஸ்தவ பாடலாக்கப் படுவதாகவும் விமர்சித்தனர்.

விட்டல் – ஹனீபா

இதற்கிடையே “சொந்த காரணங்களுக்காக ஆகஸ்ட் 25 நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது” என்று ஓ.எஸ்.அருண் அறிவித்துள்ளார்.

ஆனாலும் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், “தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளை மாற்றிப்பாடுவதைத்தான் எதிர்க்கிறோம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதே நேரம் இஸ்லாமிய பாடல் ஒன்று இந்து பாடலாக மாற்றப்பட்டுள்ளது.

நாகூர் அனிபா பாடிய “இறைவனிடம் கையேந்துங்கள்” என்கிற இஸ்லாமிய பாடல் பல ஆண்டுகளாகவே புகழ் பெற்றது.

 

அந்த பாடல்

 

 

இந்த விட்டல்தாஸ் மகராஜ் என்பவர் இந்து பாடலாக மாற்றிப் பாடி வருகிறார். ஒரிஜினல் பாடலில் “அல்லா” என்று வரும் இடத்தில் “ஆண்டவன்” என்று மாற்றிப் பாடுகிறார்.

ஆண்டவன் என்பது பொதுவான வார்த்தைதானே என்று சமாளிக்கலாம். ஆனால் அல்லா என்பதை ஏன் வேறு வார்த்தைக்கு மாற்ற வேண்டும்

மாற்றப்பட்ட இந்த பாடல் 2013ம் ஆண்டு யு டியுபில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இது வரை இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே” என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மாற்றப்பட்ட பாடல்: