சென்னை:

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை மக்களால் தாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், கட்டணச் செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்குமா? என பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பான பொதுநல மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், தனியார் மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்கான செலவை  மத்திய மாநில அரசுகள் ஏற்க முன்வருமா? என கேள்வி எழுப்பியது மேலும்.

தனியார் மருத்துவமனைகளில்அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பொதுமக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக  வரும்  16-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.