’பிக் பாஸ் 3’ யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா …???

விஜய் டிவியில் 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ . 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’, கடந்த வருடம் (2018) ஜூன் 17-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது ‘பிக் பாஸ்’ டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது போட்டியாளர்களின் முழு விபரம் என்று ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

மிர்னாலினி

சாந்தினி

கஸ்தூரி

விசித்ரா

தொகுப்பாளினி ரம்யா

பூனம் பாஜ்வா

ரமேஷ் திலக்

சரண் ஷக்தி

பாலாஜி முருகதாஸ்

ஜாங்கிரி மதுமிதா

கிரிஷ்

பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான், என்று இந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானாலும், இது அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி