லக்னோ:

ங்கி ஊழியர்களையோ அவர்களது உறவினர்களையோ திருமணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பத்வா (மத்தில் இருந்து நீக்கப்படுதல்) விதிக்கப்படும் என்று இசுலாமிய மத கல்வி நிறுவனமான தாருல் உலும் தோபா தலைவர் அறிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே பிரபலமான இஸ்லாமிய மத கல்வி நிறுவனமான தாருல் உலும் உத்திர பிரதேசத்தில் சகன்புரியில் அமைந்துள்ளது.

இதன் தலைவரிடம், “வங்கியில் பணிபுரிபவரின் மகளை மணம் புரிவது பற்றி இஸ்லாமியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் “வங்கி போன்ற வட்டி தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து சம்பளம் பெறுவது பாவம். இலாப நோக்கில் வட்டியை எதிர்பார்த்து பணம் சம்பாதிப்பது இசுலாத்திற்கு எதிரானது. வங்கியில் பணிபுரிபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உண்மைக்கு எதிரானவர்கள்.

கடவுள் பயமில்லாத பிண வாழ்க்கையையே வாழ்பவர்கள். அவர்களோடு எந்தவித உறவும் வைக்காமல் இருப்பதே நலம். அப்படி திருமண உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு பத்வா (மதத்திலிருந்து நீக்குதல்) அளிக்கப்படும்” என்றார்.