‘ஜெகமே தந்திரம்’ மீண்டும் ஓடிடி குழப்பம்.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்..

டிகர் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் இடம் பெறும், ‘ரகிட ரகிட..’ படத்தின் பாடல் தனுஷ் பிறந்த தினமான வரும் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். இந்நிலையில் நேற்று திடீரென்று ஜெகமே தந்திரம் ஒடிடி தளத்தில் வெளியாக பேச்சு வார்த்தை நடப்பதாகவும் இதுபற்றி தனுஷிடம் பேசிவிட்டுதான் முடிவெடுக்க முடியும் என்று பட தரப்பு தெரிவித்தாக வும் ஆனால் பட ரிலீஸ் பற்றி தயாரிப்பா ளர்தான் முடிவு செய்ய வேண்டுமென்று தனுஷ் கூறிவிட்டதால் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் நெட்டில் தகவல் பரவியது. மேலும் தனுஷ் நடித்த இப்படத்துக்கு பெரும் தொகை தர ஒடிடி தளம் தெரிவித்திருப்பதாகவும் கூறப் பட்டது, இந்நிலையில் பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கம் அளித்திருக் கிறார்.


அவர் கூறும்போது,’ஜெகமே தந்திரம் தியேடரில்தான் ரிலீஸ் ஆகும். தியேட்டர் திறப்புக்காக காத்திருப்போம். ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகாது’ என்றார்.
ஜெகமே தந்திரம் படம் கேங்ஸ்டர் கதை யாக உருவாகி இருக்கிறது. இதில் ஹாலிவுட் கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நட்ராஜன். ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.