இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னதாகவே, பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட். அவரைப் பற்றிய பில்டப்புகளும் அதிகமாக இருந்தன.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், முதல் 2 நாட்களில் பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத ஒரு பிட்சில், ஜோ ரூட் இரட்டை சதமடித்தவுடன் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் இங்கிலாந்து மீடியாக்களும், அந்நாட்டு முன்னாள் வீரர்களும்!

ஆனால், முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலேயே கதை மாறியது. பிட்ச் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கத் தொடங்கியவுடன், ஜோ ரூட் தடுமாற தொடங்கினார்.

முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் திணறி, தனது விக்கெட்டை மிகக்குறைந்த ரன்களுக்கு இழந்தார்.

இப்போது, அகமதாபாத் டெஸ்ட்டிலும், முதல் இன்னிங்ஸில் வெறும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். அவர், தொடர்ச்சியாக சொதப்பும் இந்த 4 இன்னிங்ஸ்களும், பிட்ச் பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த நிலையில் நடந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

எனவே, ஜோ ரூட், பில்டப் கொடுக்கப்பட்ட அளவிற்கெல்லாம் ஒர்த்தான ஆள் இல்லை என்ற கருத்தே, நடக்கும் நிகழ்வுகளின் மூலம் உருவாகியுள்ளது.