ரஜினியை விமர்சிக்கிறதா சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பட டிரைலரில் “போராட்டம் நடத்துறது தப்புனா, போராடும் சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என்று சூர்யா பேசுவது போல் ஒரு வசனம் வருகிறது.

இந்த வசனம், நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பதாக நெட்டிஸின்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ரஜினி செய்தியாளர்களிடம் பேசிய போது, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியிருந்தார். அதை விமர்சிப்பதாக உள்ளது இந்த ட்ரெய்லர் என கூறி வருகின்றனர்