கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவரா அல்லது……? : பட்டுக்கோட்டை பிரபாகர்

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு விழா, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

ரஜினிக்கு வாழ்த்து ஒரு பக்கம் இருப்பினும் கமலுக்கு விருதுக் கொடுக்காதது ஒரு பக்கம் அவர் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது .

கமலுக்கு விருதுக் கொடுக்காதது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில், “குழந்தை நட்சத்திரமாக தன் கலைப் பயணத்தைத் துவங்கி, தன் வளர்ச்சிக்காகப் பொழுது போக்குப் படங்களையும், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகப் பரிசோதனை முயற்சிகளையும் 60 வருடங்களாக மாறி மாறி கொடுத்து, தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக சேவை செய்ய வைத்து, இன்று அரசியல் களத்திலும் குதித்து முரட்டு ஓட்டு வங்கிகள் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கு நடுவில் மாற்று ஆட்சிக்கான விதையை விதைத்து அந்த லட்சியத்தை நோக்கிச் சோர்ந்து போகாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவரா அல்லது……?” என்று தெரிவித்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

இந்தப் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் பலர் எதிர்ப்புகளையும், கமல் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி