சுட்டுக்கொல்லப்பட்ட கான்பூர் ரவுடி துபேயின்  வாழ்க்கை சினிமாவாகிறா?

நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கை, சினிமா படமாக எடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று.

சில நேரங்களின் அந்த தாதாக்களின் பெயர்களை மட்டும் படத்தில் பயன்படுத்திக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பில்லாவும், ரங்காவும் உதாரணம்.

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் உயிர் இழந்த விகாஸ் துபேயின் வாழ்க்கை இந்தியில் சினிமாவாக எடுக்கப்பட இருப்பதாக மும்பையில் ஒரு பொழுதுபோக்கு இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிக்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘’விகாஸ் துபேயாக நடிகர் மனோஜ்பாஜ்பாய் நடித்தால் நன்றாக இருக்கும் ‘’ என்று இந்தி தயாரிப்பாளர் சந்தீப் கபூரும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த செய்தியை மனோஜ் மறுத்துள்ளார்.

‘’ அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தி தவறானது’’என்று மனோஜ் பாஜ்பாய், தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.