சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னையில் நிலவும் மோசமான குடிநீர் பஞ்சத்திற்கு, மெட்ரோ ரயிலுக்கான நிலத்தடி சுரங்கப்பாதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னால், எந்தளவிற்கு கோடையாக இருந்தாலும், தண்ணீர் பிரச்சினை வந்ததில்லை என நந்தனம் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மொத்தம் 45 கி.மீ. நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில், சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், “மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள வேறு எந்த மாநிலத்திலும், தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினை எதிர்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பாக எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து நாங்கள் எதுவும் கருத்துகூற விரும்பவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் சந்தித்ததில்லை” என்றார்.

ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், வெறும் 550 மில்லியன் லிட்டர்கள் மட்டுமே சென்னை மெட்ரோ சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது.