ஐஎஸ் தீவிரவாதிகளின் புதிய வீடியோ- பதற்றத்தில் ஈரான் தலைவர்

டெஹ்ரான்,

ஈரான் நாட்டை மிரட்டி ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் சமூக ஊடகம் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அரைமணி நேரம் ஓடுகிறது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் செய்தியில், முகமூடி அணிந்திருந்த ஒரு தீவிரவாதி ஈரான் நாட்டுத் தலைவர் அயடோலா அலி காமினெவின் பெயரைக்குறிப்பிட்டு பேசியதாகவும், இஸ்லாமிய கட்டுப்படுத்துவதால் அவரை சபிப்பதாகவும் விரைவில் அவரது இல்லம் அழிக்கப்படும் என்றும் அந்தத் தீவிரவாதி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் நாடு விரைவில்

சன்னி முஸ்லிம்களின் நாடாக மலரும் என்றும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் ஈரான் ராணுவ வீரர்கள் பலர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.