முத்தலாக் மசோதா நிறைவேறுமா…..? எதிர்க்கட்சி தலைவர்களுடன் குலாம்நபி ஆசாத் ஆலோசனை

டில்லி:

மாநிலங்களையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ்  எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார்.

திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறார்.

ஏற்கனவே மாநிலங்களவையில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சியினர் அதிகம் இருப்பதால், கடந்த முறை முத்தாக் மசோதா நிறைவேற முடியாமல் போனதால், இந்த முறை அதை நிறைவேற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இது தொடர்பாக தெலுங்குதேசம், டிஆர்எஸ் கட்சிகள் உள்பட பல கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது.

இந்த நிலையில்  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன. பாஜகவின்  முத்தலாக் மசோதாவை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கனவே அதிமுக, திமுக முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா  நிறைவேற்றப்படுவது கடினம் என்று அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால், அவசர சட்டம் பிறக்கப்பட்டது. பின்னர் சில திருத்தங்களுடன் புதிய முத்தலாக் மசோதா மீண்டும்மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.