பிரபுதேவா படத்தில் நயன்தாராவா? தயாரிப்பாளர் விளக்கம்..

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் கார்த்தி நடிக்க கருப்பு ராஜாவெள்ளை ராஜா படம் உருவாகவிருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஐசரிகணேஷ் தயாரிப்ப தாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகை நடிகர் சங்கத்துக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அறிவிப்பு மற்றும் படத்தின் டிசைனோடு அப்படம் முடங்கியது. படப்பிடிப்பு தொடங்கப் படவில்லை.இதற்கிடையில் விஷால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது கருப்புராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாகவும் அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என்றும் தகவல் வெளியானது. கார்த்தி அதே வேடத்தில் நடிக்க விஷாலுக்கு பதில் வேறு ஹீரோ நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படம் பற்றி தயாரிப் பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் கருப்புராஜா வெள்ளைராஜா படம் நீண்ட நாட்களுக்கு முன்பே டிராப் செய்யப்பட்டுவிட்டது. அதை மீண்டும் தயாரிக்கும் எண்ணம் இல்லை அப்படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை’என் றார். இதையடுத்து பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகவில்லை. அதுவெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.