வடகொரிய அதிபா் சீன நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் சிலா் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்  இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகி உள்ளன.

அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடா்ந்து நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, தென்கொடரியா ஆகிய நாடுகள் தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் வடகொரியாவின் சில  நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் ஐ.நா. சபையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சீனா வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா கூறியது. ஆனால் சீனா இதனை  மறுத்தது.

ஆனாலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு தென்கொரியா  அமெரிக்கா – வடகொரியா இடையே சுமூகமான போக்கு நிலவி வருவதாக நம்பப்படுகிறது. இந்த  சூழலில் வடகொரிய அதிபர் கிம்மின் சீன பயணம் குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.