வட கொரியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கொல்லப்பட்டாரா?

பியாங்யாங்

ட கொரியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளியை அரசு சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  அந்த வைரஸ் வேகமாகச் சீனா முழுவதும் பரவி உள்ளது.  தற்போது சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ள போதிலும் உலகின் பல நாடுகளும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

நேற்றுடன் சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கி உள்ளது.  அதிகார பூர்வமான மரணமடைந்தோர் எணீக்கை 2870 எனக் கூறப்படுகிறது.   நேற்று மட்டும் சீனாவில் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 573 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வட கொரியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதால் அவர் கொல்லப்பட்டதாக டிவிட்டரில் தகவல்கள் பரவி வருகின்றன.   அவர் யார் என்பதும் எந்த இடத்தில் இது நடந்தது என்பதும் தெரியவில்லை.

இந்த செய்தியை சிங்கப்பூரைச் சேர்ந்த ஐபி டைம்ஸ் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.   இணைய தளங்களில் இந்த செய்தி பரவப்பட்டு வைரலாகிறது.  வட கொரிய அரசு இதை உறுதிப்படுத்தவில்லை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You may have missed