ஓபிஎஸ் – இபிஎஸ் இணையுமா? சட்டசபையில் அரசுக்கு ஆதரவாக ஒபிஎஸ்

சென்னை,

ட்டமன்ற மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் ஆட்சி செய்துவரும் எடப்பாடி அரசுக்க ஆதரவாக ஓபிஎஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இதன் காரணமாக அணிகளும் விரைவில் இணையும் சூழல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று  தொடங்கியது.  தொடக்கத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கூவத்தூர் பண விவகாரம் குறித்த வீடியோ குறித்து ஸ்டாலின் கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், தனபால் அதுகுறித்து விவாதிக்க மறுத்ததை தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக திமுக உறுப்பினர்களை சபாநாயகர் வெளியேற்றினார்.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். ஓபிஎஸ் அணியை சேர்ந்த, பிரச்சினைக்குறிய வீடியோ சரவணனும் சட்டசபையினுள் அமைதியாகவே காணப்பட்டார்.

தொடர்ந்து சட்டமன்றத்தில்  அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து  சட்டசபையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் தொடங்கி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்துக்கு ஆதரவாகவே ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தனர்.

சமீபத்தில், பிரதமர் மோடி இரு அணிகளும் இணைய வேண்டும் என்று விரும்புவதாக, ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் எடப்பாடி அணியினருக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினர் செயல்பட்டு வருவது, விரைவில் இரு அணிகளும் இணையும் என்றே கூறப்படுகிறது.