சென்னை:

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என குற்றச்சாட்டு கூறியிருந்த பாமக தலைவர் ராமதாசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார்.  ராமதாஸ் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நிலம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தும், படத்தை பாராட்டியும் பேசியிருந்தார்.

இதையடுத்து, பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என குற்றச்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, ராமதாசுக்கு பதில் அளித்த ஸ்டாலின், முரசொலி அலுவலகத்துக்கான பட்டா நகலை வெளியிட்டு,  நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!

அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! என்று ஆதாரத்துடன் விளக்கி உள்ளார்.

ராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா?