ஜீ தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா…..!

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. சின்னத்திரையிலும் கால் பதித்து அங்கு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொண்டார்.

இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற பல சீரியல்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் நடித்து வந்தார். திடீரென அவர் நடித்து வந்த சந்திரகுமாரி சீரியலில் இருந்து விலகியுள்ளதாகவும் அந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி நடிக்க இருப்பதாக தகவல் வந்ததது

இந்நிலையில் தற்போது இவர் சன் டிவியிலிருந்து ஜீ தமிழ் சேனலுக்கு தாவ இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராதிகா விரைவில் சின்னத்திரையில் என்னை காணலாம் உங்கள் அன்பிற்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.