சீமான் – ரஜினி

“சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று ட்விட்டர் பதிவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று சென்னை அண்ணாசாலையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதற்கிடையே காவலர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் சீமான் இருக்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதன் மூலம், சீமானை மறைமுகமாக ரஜினி கண்டிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

ரஜினி ட்விட்: