வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி?: போட்டுத்தாக்கும் நெட்டிசன்கள்…

சென்னை:

மிழகத்துக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த காவிரி  நீரின் அளவையும் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்து  அது குறித்த பணிகளில் தீவிரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்ன கருத்து சொல்லப்போகிறார் என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் கேட்டுவருகிறார்கள்.

இது குறித்து பலரும் பதிவிட்டிருப்பதாவது:

“உயர் மதிப்பு நோட்டுகளுக்கு மத்திய அரசு இரவு 8 மணிக்கு தடைவித்தது. உடனே அதை வாழ்த்தி ட்விட்டினார் ரஜினி. மத்திய அரசின் அந்த நடவடிக்கையால் பொதுமக்கள் நொந்து நூலானபோதும், தனது வாழ்த்தை திரும்பப்பெற வில்லை அவர்.

ஆனால் தமிழகம் சார்ந்த விசயம் என்றால் ரஜினி வாய்திறக்க மாட்டார். காவிரி, முல்லைப்பெரியாறு என்று நீர் விவகாரமாக இருந்தாலும், தமழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் உயிர் விவகாரமாக இருந்தாலும் வாய்ஸ் கொடுக்க மாட்டார்.

அதே நேரம் கர்நாடகத்தில் பல நடிகர்கள் தங்களது மாநில உரிமைக்காக உரத்து முழங்குகறார்கள். பெரும்பாலும் தமிழ்ப்படங்களிலேயே நடிக்கும் கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் கூட தனது மாநிலத்துக்காக குரல் கொடுக்கிறார்.

ஆனால் ஆனால் தமிழக மக்களின் உழைப்பை சுரண்டி வாழும் ரஜனி போன்ற நடிகர்கள் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில்லை.

குறிப்பாக ரஜினியைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினையில் மாற்றி மாற்றி கருத்து கூறியவர். இங்கே தமிழகத்துக்கு ஆதரவாகவும், கர்நாடகம் சென்றால் அதற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார்.

இவரைப்போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.