‘ராங்கி’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பாணியில் எடுக்கப்படுகிறதா….?

சுமார் 16 ஆண்டுகளாக கதாநாயகி அந்தஸ்திலேயே இருந்து தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா.

இவர் கடைசியாக நடித்த 96 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத இயக்குநர் சரவணன் இயக்கும் ‘ராங்கி’ படத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாலைவனப் பகுதியில் எடுக்கப்பட உள்ளதாம். இதற்காக வெளிநாட்டிற்கு லொகேஷன் பார்க்க படக்குழுவினர் சென்றுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் போல கதைக்களம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ar murugadoss-, lyca, rangi, trisha
-=-