நேற்று இரவு நிலவில் சாய் பாபா முகம்!: உங்களுக்கு தெரிந்ததா…..?

சென்னை:

நேற்று இரவில் தோன்றிய முழு நிலவில் சாய்பாபாவின் முகம் தெரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சாய்பாபா முகம் தோன்றிய நிலவு ஒருசிலருக்கு தெரிந்ததாகவும், பலருக்கு தெரியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இது சம்பந்தமான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. பாபாவின் முகம் நிலாவில்  தெளிவாக படிந்திருப்பது போல் காணப்பட்டது. இதன் காரணமாக நள்ளிரவில் பெரும்பாலோர் மொட்டை மாடிகளிலும், தெருக்களிலும் கூடி நின்று நிலவை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நிலவில் பாபாவின் முகம் தெரிவதாகவும், ஒருசிலர் தெரியவில்லை என்றும் கூறி வந்தனர். தாங்கள் பாபாவின் முகத்தை நிலவில் பார்த்ததாக சிலர் கூறி பரபரப்பை மேலும் அதிகரித்தனர்.

பொதுவாக நிலவில் தெரியும் கருப்பு உருவிலான உருவம், முந்தைய காலத்தில் பெரியோர்கள் குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்டுக் கிட்டிருக்காங்கன்னு சொல்லி உணவு ஊட்டுவாங்க… பின்னர் நிலவு சென்று வந்த விஞ்ஞானி,  நீல் ஆம்ஸ்டாங் நிலவில் கால் பதித்தது, ஏலியன் உருவப்படம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் கடந்த  2014ம் நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்று ஒரு வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது படம் நிலவில் தெரிந்ததாக கூறி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை நாசா அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீதிகளிலும், மாடிகளிலும் கூடியிருந்த மக்கள் நிலவில் பாபா உருவப்படம் தெரிகிறதா என்று ஆ…வென்று பார்த்துக்கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மனோதத்துவ நிபுணர்கள் இதுகுறித்து கூறும்போது, நாம் எதை எண்ணிக்கொண்டு ஒரு பொருளை பார்க்கிறோமோ,,,, அதுதான் அந்த பொருளில் பிரதிபலிக்கும்… அதுபோலத்தான் பலர் வதந்திகளை நம்பி…. பாபாவின் உருவம் நிலவில் தெரிவதாக எண்ணிக்கொண்டு நிலவை பார்த்ததால்….அவர்கள் கண்களுக்கு நிலவில் பாபா தெரிவதாக தோன்றியது என்று கூறுகின்றனர்.

ஆனால்…. இதுபோன்ற வதந்திகள் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை…