டில்லி:

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் டில்லி விசிட் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. இந்த நிலையில்,நேற்று பிரதமர் மோடியை மம்தா சந்தித்து பேசிய நிலையில், இன்று உள்துறைஅமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அசாம் என்ஆர்சி விவகாரம் குறித்து பேசியதாக மம்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், மேற்குவங்க மாநிலத்தை புரட்டிப்போட்ட சாரதா சிட்பண்ட் 30ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக முதலில் விசாரணை நடத்தி வந்த மேற்கு வங்க முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ராஜீவ்குமாரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அவர் கைது செய்யப்பட்டால், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை நேற்று மாலை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, அவருக்கு நவராத்தி மற்றும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில்,  மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கருத்து தெரிவித்து உள்ளார்., “பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இது தாமதமான சந்திப்பு என்று நினைக்கிறேன். தன்னையும், தனது கட்சியையும் சிபிஐயிடம் இருந்து காக்கவே எடுக்கும் முயற்சி. ஆனால், எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

சாரதா சிட்பண்ட்  பண மோசடியில் முக்கிய பங்கு வகித்த திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் முகுல்ராய் சண்பென்ட் செய்யப்பட்ட நிலையில், பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். அதுபோல மேலும் பல திரிணாமுல் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.