சசிகலா முதல்வரா? தமிழகத்துக்கு இது இருண்டகாலம்! அன்புமணி

--

சென்னை,

திமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா  தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் 9ந்தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சசிகலா முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆத்திரம், கோபம், வேதனை என்று உணர்வுகளால் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தற்போது இருண்ட காலம் எனறு கூறினார்.

சசிகலா  நாளை தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுக்கிறார். இந்நிலையில், பா.ம.க.இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது,

தர்மபுரியில் ஒரே நாளில் ஓய்வின்றி  15 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதனால் திடீரென்று உடல் அசதி ஏற்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியதன் பேரில் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டேன். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

இதற்கிடையில் எனது உடல்நிலை பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன.

ஆனால் ஜெயலலிதா சுய நினைவு இல்லாமலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போதும், லேசான காய்ச்சல் என்றுதான் தகவல் பரப்பினார்கள்.

தற்போது தமிழகம் சோதனை மிகுந்த இருண்ட காலத்தில் உள்ளது. மக்கள் ஆத்திரம், கோபம், வேதனை என்று உணர்வுகளால் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கட்சியின் தலைவர்,  பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் முதல்வராக வருபவரை மக்கள் ஏற்க வேண்டும். சசிகலாவுக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்சியிலும் அதிகாரத்திலும் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை.

எனக்கு பிறகு சசிகலா தான் என்று சொன்னதும் இல்லை. 3 முறை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் அடையாளம் காட்டினார். எனவே மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

சசிகலாவுக்கு இருக்கும் ஆதரவு 200 பேர் மட்டும் தான். அது அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும்தான். இன்னும் ஒரு வாரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப் போவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. எனவே கவர்னர் ஒரு வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். தீர்ப்புக்கு பிறகு தேவைப்பட்டால் அடுத்த கட்டத்தை யோசிக்க வேண்டும்.

வழக்கு வி‌ஷயங்களுக்காகத்தான் சசிகலா முதல்வராக அவசரம் காட்டுகிறார். தீர்ப்பு வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டு விட்டதால் முதல்வர் பொறுப்பு ஏற்க அவசரம் காட்டக் கூடாது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினாலும் அரசின் மீதான கோபம்தான் அவர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

தமிழக அரசியலில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.