திருச்சி,

சீமான், திருமாவளவன் போன்றோரின் மனநலம் சரியாக இருக்கிறதா என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில்,  பிஎஸ்என்எல் திருச்சி மண்டலம் சார்பாக, கரூர் காெங்கு திருமண மண்டபத்தில், ‘இணைவாேம்…அனைவரும் வளர்வாேம்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதியஜனதாவை சேர்ந்த எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த, கரூர் தொகுதி எம்.பி.யான தம்பித்துரை கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்துகொள்ளாத நிலையில், அழைப்பிதழில் பெயர்  போடாத எச்.ராஜா திடீரென கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது,

‘மோடி அடிச்சா அது எல்லாமே சிக்ஸர்தான் என்று தொடங்கிய அவரது பேட்டி, கடந்த மூன்றாண்டு மோடி சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கத்தக்கவை என்றார்.

மோடி  ஆட்சிக்கு வந்தபிறகுதான், இந்தியப் பாெருளாதாரம் எங்கேயாே உயர்ந்திருக்கு. 28 கோடியே, 60 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கேஸ் மானியத்தில் 14,600 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்று அடுக்கினார்.

மேலும், . மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களில்,  பிரதமர் படம் இல்லாமல் செயல்படுத்தி னால், அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு அரசு கழிவறையில்கூட காசு திருடுகிறது என்று குற்றம்சாட்டிய ராஜா, தமிழகம் முழுவதையும் பாலைவனமாக்கிய திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழர்களின் விடிவு காலம் உள்ளது என்றார்.

தமிழகத்திலிருந்து மணல் கடத்தி கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அது வெளிநாடுகளுக்கு உலர் மணலாக அனுப்பப்படுகிறது என்று அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் சரியாக உள்ளார்களா எனத் தெரிய வில்லை. அவர்களுக்கு பிரதமரை விமர்சிக்க எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்குப் புறம்பாக பிரதமரை விமர்சித்துப் பேசும் திருமாவளவனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றவர்,

மன்மோகன்சிங்,சிதம்பரம் போன்றவர்கள்தான் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவர்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஏழைகளின் அக்கவுண்டில் பணம் போடுவதாக மோடி சொன்னது குறித்து  செய்தியாளர்களின் கேள்விக்கு,   மக்கள் அக்கவுன்ட்டில் 15 லட்சம் பணம் பாேடுறதா எங்கேயும் எப்பாேதும் மோடி சாெல்லலை. அப்படிச் சாென்னதா நிரூபிச்சா, நான் அரசியலை விட்டே பாேயிடுறேன். அப்படி நிரூபிக்க முடியலைனா, நீங்க மீடியா வேலையை விட்டே பாேகத் தயாரா?’, என்று பத்திரிகையாளர்களைச் சவாலுக்கு இழுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.