சென்னை: ஹர்பஜனுக்கு ரிக்கிப் பாண்டிங் போல், அஸ்வினுக்கு ஸ்டீவ் ஸ்மித் என்ற ஒப்பீடு எழும் வகையில், இதுவரை மொத்தம் 5 தடவைகள், ஸ்மித்தை, டெஸ்ட் போட்டியில் காலி செய்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்த அஸ்வின், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் ஸ்மித்தை காலி செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் பேட்டிங்கின் ஆணி வேர் என்று வர்ணிக்கப்படுபவர் ஸ்மித். டெஸ்ட் பேட்டிங்கில், ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர். மேலும், சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆடுபவர் என்ற பெயரைப் பெற்றவர்.

இந்நிலையில், அஸ்வினிடம், டெஸ்ட் போட்டிகளில், மொத்தமாக 5 முறை வீழ்ந்துள்ளார். முன்பு, புகழ்பெற்ற பேட்ஸ்மேன் ரிக்கிப் பாண்டிங், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிடம் மொத்தம் 11 முறை அவுட்டாகியுள்ளார். தற்போது, அந்த ஒப்பீட்டின்படி, அஸ்வினுக்கான ஆள் ஸ்டீவ் ஸ்மித்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் குமார்  சங்ககாரா மற்றும் இங்கிலாந்தின் ஆலஸ்டெய்ர் கூக் ஆகியோரையும் அதிகமுறை அவுட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.