பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் என்ன நடக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இன்றைய வெளிவந்த புரோமோவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் மகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதலாவது சனம் பாலாஜி பிரச்சினையை கையில் எடுக்கிறார் கமல். அதன்பிறகு அந்த ஒரு வார்த்தையை குறித்து விசாரிக்கிறார். அது எந்த வார்த்தை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த வாரம் அர்ச்சனா குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அவர் எலிமினேட் செய்யபட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த வாரம் சுரேஷ்தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்றும், புதிதாக துவங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொள்வார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.