தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமா? பாஜக தலைவர் பொன்னாருக்கு தமிழக அமைச்சர் பதிலடி!

சென்னை:

மிழகத்தில் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டிய  பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.  புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், இந்தியாவில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என கூறிவிட முடியுமா?” அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் ஒதுக்குவதில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்னார், தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,  அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித  எவ்வித பிரிவும் இல்லை, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று கூறினார்.

மேலும், தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்று கூறிய பொன்னாரின் குற்றச்சாட்டு தவறானது என்று மறுப்பு தெரிவித்தவர், இது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார். தற்போதைய மத்திய அமைச்சரவையில் பொன்.ராதாகிருண்ணன் அங்கம் வகிக்காத நிலையில், அவரது கருத்து தேவையற்றது என்றவர், புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதால்,  இந்தியாவில் சட்டம் ஒழுங்குசரியில்லை என்று கூறி விட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கார்ட்டூன் கேலரி