‘தமிழக விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள்:?’ மத்திய அமைச்சர் கோபம்

திருச்சி:

நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி வந்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறதே என்ற கேள்விக்கு, ‘தமிழக விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள்’ என்று கோபாவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு  ஐ.நா.சபையின் மிக உயரிய விருதான ‘‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’’ என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார் என்று கூறினார்.

அவரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு மீண்டும் அதை செயல்படுத்த முனைவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பொன்னார்,  விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள் என காட்டமாக கேள்வி எழுப்பி னார்.  ஒரு வி‌ஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நமது மாநில விவசாயிகளை,  நாட்டில்  எந்தெந்த மாநிலங்களில் எப்படி எப்படி ஹைட்ரோ கார்பன் எடுக்கிறார்கள் என்று சுற்றுப்பயணம் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.

சமூக லைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப்களில்  சுய லாபத்திற்காக பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பதிவு செய்கிறார்கள். இவர்களில் ஒருவருக்காவது முகவரி உள்ளதா? என்று கோபத்துடன் பேசியவர்,  தமிழகத்தை சீரழிக்க ஒரு மிகப்பெரிய கூட்டமே உள்ளது என்று குற்றட்ம சாட்டினார்,

ஹைட்ரோ கார்பன் புராஜக்ட்

தமிழகத்தில், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்  ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டங்களை பற்றியும் பேசுவதற்கு அரு கதையில்லை என்றவர்,   ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று கூறுகிறார்கள். உலக நாடுகள் அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. நம்மிடம் உள்ள பொருட்களை எடுக்காமல் அயல் நாட்டில் இருந்து வாங்கவேண்டும் என்றால் தி.மு.க., காங்கிரஸ் அந்நிய நாட்டின் கைக்கூலிகளாகவும், ஏஜெண்டுகளாகவும் செயல்படுகிறார்கள் என்று கோபாசமாக கூறினார்.

மக்களை தேவையற்ற முறையில் அச்சுறுத்தி, ஒரு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது போன்ற தோற்றத்தை உருவாக்கி காட்டுவது, இதுபோன்ற கேவலமான அரசியலில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் விடுதலை பெறவேண்டும் என கருதுகிறேன் என்றார்.

தொடர்ந்து, அரசு நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்களே என்ற கேள்விக்கு, மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததால் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகம் தான் அதிக அளவில் இழப்பீட்டு தொகையை பெற்றுள்ளது. இது சிறப்பு அல்ல. இதுபோன்ற இழப்பு ஏற்படக்கூடாது என்று கூறினார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக இரண்டாவது விடுதலை போராட்டம் நடத்துவதாக ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு,   அவருக்கு விடுதலை கிடைக்காது. இதுபோன்ற கற்பனையில்தான் அவர் போராட்டம் நடத்துவார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில,  . பா.ஜ.க. 350 பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் 400-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்