Random image

கேரளவெள்ளத்துக்கு தமிழ்நாடுதான் காரணமா?: தமிழக சி.பி.எம். பாலபாரதியின் பதில் என்ன தெரியுமா?

ரவுண்ட்ஸ்பாய்:

 

ரலாறு காணாத வெள்ளத்துல கேரளாவே த்ததளிச்சுப்போச்சு. இன்னமும் பல மாவட்டங்கள்ல இயல்பு நிலை திரும்பல. ஏகப்பட்டபோரு இன்னமும் நிவாரண முகாம்கள்லதான் இருக்காங்களாம்.

தமிழ்நாட்டுலேருதும் கேரளாவுக்கு ஏகப்பட்ட நிவாரண உதவிகள் போயிட்டிருக்கு. கட்சிங்க, லட்சம் கோடிங்கன்னு நிதி உதவி அறிவிச்சிருக்கு. தமிழ்நாடு அரசு, தன்னோட ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்த தரப்போவுது. இதுவே இருநூறு கோடி ரூபா இருக்குமாம்.

தனிப்பட்ட நபருங்களும் இங்கிருந்து செஞ்சுட்டிருக்கிற உதவிங்க ஏராளம், தாராளம்.

பேஸ்புக்ல பார்த்தா, “தோழர்.. நான் சேலத்துல நிவாரண லாரியோட இருக்கேன்.. நீங்க?” அப்படின்னு பதிவு. அதுக்கு பின்னூட்டத்துல, “தோழர்.. நான் ஊட்டில ரெண்டு லாரியோட நிக்கேன்”னு பின்னூட்டம்.

என்னதான் முல்லைப்பெரியாறு விசயத்துல கேரளா தகராறு செஞ்சாலும், நம்ம தமிழ்நாட்டு மக்களோட கருணை உள்ளம் எம்புட்டு மகத்தானது.. உண்மையாவே நெகிழ்ந்துட்டேன்.

இவ்ளோ செஞ்சம், கேரள (சி.பி.எம்.) முதல்வர் பினராயி விஜயன் திடீர்னு ஒரு குண்டத்தூக்கிப் போட்டாரே… “முல்லைப்பெரியாறு அணையில தமிழ்நாடு அரசு 142 அடி தண்ணிய தேக்கினதுதான் வெள்ளத்துக்கு காரணம். நாங்க சொல்லியும் தமிழ்நாடு அரசு கேட்கல…”னு அதிரடியா சொன்னாரே..=

பினராயி விஜயன் – கேரள வெள்ளம்

இதையே சொல்லி உச்சநீதிமன்றத்துல ஒரு வழக்கும் போட்டாரு ஒருத்தரு.

இதுக்கு தமிழ்நாடு அரசு, “கேரளா சொல்றது பொய்”யுன்னு தகுந்த விளக்கம் கொடுத்துச்சு.

அதோட நீர்வள நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்தோட, “ஆகஸ்ட் 9ம் தேதியே இடுக்கி அணையை திறந்துச்சு கேரளா. அதுதான் வெள்ளத்துக்குக் காரணம். அடுத்தடுத்த நாட்கள்ல அங்கே வெள்ளம் பெருகுச்சு. ஆனா ஆகஸ்ட் 15ம் தேதிதான் முல்லைப்பெரியாறு அணையில நீர் மட்டம் 142 அடியை எட்டுச்சு”ன்னு பளிச்சுன்னு சொன்னாங்க.

ஆனாலும், “கேரளாவுக்கு இவ்வளவு உதவியும் அந்த மாநில முதல்வரு இப்படிச் சொல்றாரே”னு பலருக்கு மனசு கேக்கலை.. எனக்கும்தான்.

கேரள முதல்வரோட பேச்சுக்கு இங்கே சில அரசியல் தலைவருங்க கண்டனம் தெரிவிச்சாங்க.

“சரி, சி.பி.எம். கட்சிக்காரருதானே கேரள முதல்வர் பினராயி விஜயன்… அவரு சொல்றத பத்தி தமிழ்நாட்டு சி.பி.எம்.காரங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்குவோம்”னு எனக்குள்ள ஆச.

உடனே சி.பி.எம். கட்சி பிரமுகரும் திண்டுக்கல் முன்ள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி அம்மாவுக்கு போன் போட்டேன்.

அம்மா.. நல்லாருக்கீங்களா..”னு கேட்டேன்.

நல்லாருக்கேன்.. எப்படிப்பா இருக்கே”னு வாஞ்சையா கேட்டாங்க.

உண்மையாவே தாயுள்ளம் கொண்டவங்க. எத்தனையோ மக்கள் பிரச்சினைகளுக்கு போராடி தீர்வு கண்டவங்க. எம்.எல்.ஏ.வா இருந்தும் பைசா காசு சம்பாதிக்காதவங்க. பொது விவகாரத்துல மட்டுமில்ல.. தனிப்பட்ட முறையில் எல்லார் மீதும் அன்புகாட்டறவங்க.

சி.பி.எம். கட்சியில எல்லாருமே அப்படித்தானே!

மத்த பல கட்சிகள்ல, அத்தி பூத்த மாதிரி நல்ல எம்.எல்.ஏக்கள் இருப்பாங்க. ஆனா சி.பி.எம்.ல அத்தி பூத்தமாதிரித்தான் சுயநலக்காரங்க இருப்பாங்க. அவங்களும்கூட கட்சியில ரொம்பநாள் நீடிக்க முடியாதே!

சரி, விசயத்துக்கு வருவோம்.

பாலபாரதி

பாலபாரதி அம்மாட்ட, “கேரளாவுல இம்புட்டு வெள்ளமா போச்சேனு வருத்தமா சொன்னேன்.

“ஆமாமாம்! வரலாறு காணாத வெள்ளம். ஆனாலும் அங்க அரசு சிறப்பா நிவாரண நடவடிக்கைங்க எடுக்குது… தமிழ்நாடு உட்பட பல தரப்பிலருந்தும் உதவிகள் போயிட்டிருக்கு… சீக்கிரம் அந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும்..!”

“ஆமாம்மா! சீக்கிரம் இயல்பு நிலைக்கு வரட்டும்! அப்புறம் ஒரு விசயம்… முல்லைப்பெரியாறு அணையில 142 அடி தண்ணி தேக்கின தமிழ்நாடு அரசும் வெளத்துக்குக் காரணம்னு கேரள முதல்வர்.. உங்க கட்சிக்காரு பினராயி விஜயன் சொல்லியிருக்காரே.. அதுக்கு உங்க பதில் என்னம்மா?”

“அவரு சொல்லியிருக்காரா..”

“ஆமாம்மா.. எல்லா மீடியாவுலயும் இந்த செய்தி வந்திருக்கே..”

“இதுக்கு கட்சிதான் பதில் சொல்லணும்.. நான் எதுவும் சொல்ல முடியாது!”

“நீங்க திண்டுக்கல் தொகுதியில போட்டியிட்டப்பலாம் கட்சிக்காரங்க மட்டுமில்ல.. கட்சி சாராதவங்களும் ஓட்டுப்போட்டுத்தான் தேர்ந்தெடுத்தாங்க.. தவிர தமிழ்நாட்ட சேர்ந்தவரு.. நீங்க பதில் சொல்லலாமே..”

“இல்லே.. கட்சிதான் பதில் சொல்லணும்..”

“அப்போ தமிழ்நாடும் வெள்ளத்துக்குக் காரணம்னு உங்க கட்சிக்காரரு  பினராயி விஜயன் சொல்றாரே.. அது கட்சியோட கருத்தா..”

“இப்போ கேரள மக்கள் வெள்ளத்தால பாதிக்கப்பட்டிருக்காங்க… அவங்க இயல்பு நிலைக்குத் திரும்பறத பத்தி யோசிப்போம்..”

“ஆனா.. பாதிக்கப்பட்ட கேரள முதல்வரே தமிழ்நாட்டை குற்றம் சொல்றாரே.. அதுவும் தவறான தகவலோட! இதுக்கு நீங்க உங்க கருத்தை சொல்லலாமே..”

“கட்சிதான் பதில் சொல்லணும்..!”

“சரிம்மா.. உங்க கட்சியோட கருத்துதான் என்ன?”

”அதை கட்சிதான் சொல்லணும்!”

இதுக்கு மேல என்ன பேசறதுன்னு தெரியா, “சரிம்மா.. உங்க பதிலுக்கு நன்றி”னு சொல்லிட்டு போன வச்சுட்டேன்.

ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி மத்த பல கட்சிகளோட ஒப்பிடும்போது.. மக்களுக்காக சிந்திக்கிறது, போராடுறது, நேர்மை.. இதிலெல்லாம் சி.பி.எம்.மை அடிச்சுக்க முடியாது. நிச்சயமா ரெட் சல்யூட் வைக்கலாம்.

ஆனா.. தமிழ்நாட்டுக்கு எதிரா பொய்யா குற்றம் சாட்டுர கேரள காம்ரேட்சுகளுக்கு பதில் அளிக்க மட்டும் தயங்கறாங்களே..!

சரி, பாலபாரதி அம்மா சொன்னது மாதிரி கட்சி என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்!

இப்படிக்கு –  ரவுண்ட்ஸ்பாய்!

 

You may have missed