மொசூல்,
ஈராக் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் தாக்குதல்கள் நடத்திவருகிறது. ஈராக் ராணுவத்துக்கு உதவி செய்ததாக கூறி அப்பாவி பொதுமக்கள் 60 பேரை கொன்று, மின் கம்பத்தில் தொங்க விட்டுள்ளதாக ஐ.நா. சபை தகவல் வெளியிட்டு உள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றும் முயற்சியில் ஈராக்‍ ராணுவம் அந்நகரை நோக்‍கி முன்னேறிவரும் நிலையில், பொதுமக்‍கள் 60 பேரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாகக்‍ கொன்று அவர்களின் உடல்களை மின்கம்பத்தில் தொங்க விட்டுள்ளனர்.
ஐ.எஸ்.தீவிரவாதிகள், ஈராக், ஆப்கானிஸ்தான்  மற்றும் சிரியாவின் சிலபகுதிகளில் ஆதிக்கம்செலுத்தி, நாச வேலைகளிள் ஈடுபட்டு வருகின்றனர்.
hangin
ஈராக்‍ நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்‍கு எதிராக ஈராக்‍ ராணுவம் அமெரிக்‍க கூட்டுப்படையுடன் இணைந்து அதிரடி தாக்‍குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்‍கிய நகரான மொசூல் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில், ஈராக்‍ ராணுவம் கடந்த சில நாட்களாக அங்கு அதிக அளவில் தாக்‍குதல் நடத்தி வருகின்றன
இந்நிலையில், மொசூல் நகர் அருகேயுள்ள திபா கிராமத்திற்குள் புகுந்த ராணுவம், அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மூடியுள்ள பல வீடுகளையும் கதவை உடைத்து ராணுவம் சோதனை செய்துவருகிறது.
இதனிடையே, துரோகம் செய்ததாகவும், ஈராக்‍ ராணுவத்திற்கு உதவிசெய்ததாகவும் கூறி, ஐ.எஸ். தீவிரவாதிகள், பொதுமக்‍கள் 40 பேரை கொடூரமாக கொலை செய்து, மின்கம்பத்தில்  தொங்கவிட்டுள்ளதாக ஐ.நா. மனிதஉரிமை ஆணையம் அறிக்‍கை ஒன்றை வெளியிட்டுள்ளது