ஐ எஸ் தீவிரவாதிகள் மசூதியை தகர்த்தனர் : ஈராக்

--

மொசூல், ஈராக்

எஸ் தீவிரவாதிகள் அல் நூரி மசூதி என்னும் பழங்கால மசூதி ஒன்றை ஈராக்கில் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

ஐ எஸ் அமைப்பினர் மொசூல் நகரை ஈராக் அரசுப் படையிடம் இருந்து கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர்.   ஐ எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இங்குள்ள அல்நூரி மசூதியில் 2014ஆம் வருடம் தன்னை காலிஃப் ஆக அறிவித்துக் கொண்டுள்ளார்.   பின் அவர் அதே தினத்தில் மக்கள் முன் உரையாற்றினார்.  அவர் ஆற்றிய முதல் உரை இதுவேதான்.

ஈராக் அரசுப்படையினர் இந்நகரை மீட்க போராடி வருகின்றனர்.  சமீபத்தில் அரசுப்படையினர் முன்னேறுவதைத் தடுக்க இந்த மசூதியை ஐ எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டால் தகர்த்தனர்.

மொசூல் நகருக்கு முத்தாய்ப்பாக விளங்கிய இந்த மசூதி பழம்பெரும் மசூதியாகும். இந்த மசூதியை தகர்த்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஆனால் ஐ எஸ் தனது செயலுக்கு இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை  அமெரிக்க போர் விமானத்தின் குண்டு வீச்சினால் தான் இந்த மசூதி தகர்க்கப்பட்டதாக கூறிவருகிறது..