ஐ எஸ் தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்க பயிற்சிபெறும் சிறுவர்கள்!

யாசிடி:

i 1

ஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் அளித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி இதுபற்றிய தகவலை தெரிவித்தார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் குழந்தைகளுக்கு குண்டு செய்யும் பயிற்சி அளித்து வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

யாசிடி பிரதேசங்களை இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியபின், யாசிடி மக்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

yasi-1

ஆயிரக்கணக்கான யாசிடி ஆண்கள்   ஐஎஸ் தீவிரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். யாசிடி பெண்கள் கடத்தப்பட்டு பலவந்தமாக அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகளை பிடித்து கடுமையான பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களுக்கு குண்டுகள் தயாரிக்கும் முறை பற்றி கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு தீவிரமான மதப்பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருவதாக தப்பி வந்த சிறுமி கூறினாள்.

இத்தகவல் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி