‘தேவர் மகன் 2’ தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்…?

‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் உருவாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கமல்.

1992-ம் ஆண்டு சிவாஜி, கமல் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி