அக்‌ஷரா ஹாசனின் புகைப்படங்கள் வெளியானதற்கு ரத்தி மகன் காரணமா?

மும்பை

டிகர் கமலஹாசனின் மகள் அக்‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்களை முன்னாள் நடிகை ரத்தியின் மகன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் கமலஹாசனின் இரண்டாம் மகள் அக்‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அக்‌ஷரா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அக்‌ஷரா தனது டிவிட்டரில், “இதை யார், எதற்காக வெளியிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதை ஒவ்வொருமுறையும் பலர் பகிரும்போது எனக்கு அச்சம் ஏற்படுகிறது. என்னைத் துன்புறுத்துவதில் அவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
மீ டூ இயக்கம் எழுச்சி பெறுகிற சமயத்தில் ஓர் இளம் பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அதன்மூலம் நான் துன்புறுத்தப்பட்டுள்ளேன். இதைச் செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க மும்பைக் காவல்துறையை அணுகியுள்ளேன். என்னைத் துன்புறுத்துகிற வேலையை யாரும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன்” என பதிந்தார்.

 

ரத்தி – கமல்

கடந்த 80 களில் உல்லாசப் பறவைகள், இந்திப்படமான ஏக் துஜே கே லியே படங்களில் கமலஹாசன் ஜோடியாக நடித்தவர் ரத்தி அக்னிஹோத்ரி. அவர் மகன் தனுஜ் மற்றும் அக்‌ஷரா ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டனர். இணையத்தில் வெளியான அக்‌ஷராவின் படங்களை தனுஜ் வெளியிட்டதாக தகவல்கள் வந்தன.

அக்‌ஷராவுடன் தனுஜ்

இணையத்தில் வெளியான படங்கள் அக்‌ஷாரா பயன்படுத்திய ஐ போனில் இருந்து கடந்த 2013ல் எடுக்கப்பட்டவை. அந்த புகைப்படங்களை அக்‌ஷரா அப்போது தனுஜ் உடன் பகிர்ந்துள்ளார். அதனால் அந்தப் புகைப்படங்களை தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு தனுஜ் இன் செய்தி தொடர்பாளர். “அக்‌ஷராவும் தனுஜும் நெருக்கமாக இருந்தது உண்மைதான். ஆனால் இருவருக்கிடையில் தற்போது நட்பு மட்டுமே உள்ளது. அப்போது ஒன்றாக வசித்து வந்தனரே தவிர இப்போது இல்லை. இருவரிடையே  நட்பு மட்டுமே தற்போது உள்ளது.

இருவரும் இரு தினங்களுக்கு முன்பு கூட ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசி உள்ளனர். அந்த உரையாடல் பதிவு எங்களிடம் உள்ளது. இதன் மூலம் அவர்கள் நட்பு பாழாகவில்லை என்பது தெளிவாகிறது, அக்‌ஷராவின் தற்போதைய புகைப்பட பிரச்னைக்கு எவ்வித்திலும் உதவவும் காவல்துறை விசாரணைக்கு உட்படவும் தனுஜ் தயார்” என கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி