அமைச்சர் சட்டவிதிகளுக்கு மேலானவரா? உச்சநீதி மன்றம் தமிழகஅரசுக்கு சாட்டையடி

டில்லி,

மிழக அமைச்சர் காமராஜ் மீது எப்ஐஆர் பதியாகதற்கு கண்டம் தெரிவித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைச்சர் சட்ட விதிகளுக்கு மேலானவரா என்று கேள்வி எழுப்பினர்.

மோசடி வழக்கு காரணமாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், அமைச்சர் காமராஜ்மீது எப்ஐஆர் பதியாதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்ஏத வழக்கு கடந்த ஏப்ரல் 28ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  பண மோசடி குற்றச்சாட்டு காரணமாக அவர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விவரம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்விஎஸ் குமார் என்பவருக்கு சொந்தமான பங்களா சென்னையில் உள்ளது. இந்த பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த நபரை காலி செய்ய வைப்பதற்காக, கடந்த 2016ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலுக்கு முன்,  தற்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜிக்கு அவரது உறவினர் ராமகிருஷ்ணன் மூலம் குமார் இரண்டு தவணையாக ரூ.30 லட்சத்தை குமார் கொடுத்ததாகவும்,  ஆனால் பேசியபடி வீட்டை காலி செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக அமைச்சரான காமராஜிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு,  தன்னை மிரட்டிய தாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், போலீசார் புகார் பதிவு செய்யாததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

சென்னை ஐகோர்ட்டு, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால், போலீசார்  ஐகோர்ட்டு உத்தரவை கண்டுகொள்ள வில்லை.

இதைத்தொடர்ந்து  மனுதாரர்  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 28ந்தேதி நடைபெற்ற விசரணையின்போது  உச்சநீதி மன்றம், அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை அமைச்சர்மீது எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கு  இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விசாரணையின்போது அமைச்சர்மீதான புகார் குறித்து தமிழக அரசு எந்தவித ஆவனங்களும் தாக்கல் செய்யவில்லை. மேலும் புகார் மனு தாரர் மோசடி பேர்வழி என்றும், அவர்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக, தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ரஞ்சித்குமார் கூறினார்.

ஆனால், நீதிபதிகள் அவர் வாதத்தை ஏற்க மறுத்து, உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டும் ஏன் இதுவரை எப்.ஐ.ஆர். பதியவில்லை. அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ஐகோர்ட்டு உத்தரவுபடி, இந்த வழக்கில்  இதுநாள் வரை என்னென்ன விசாரணை நடைபெற்றது என்ற விவரங்களை வரும் திங்கட்கிழமை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை?  புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? இதுதொடர்பான ஆவணங்களை வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Is the minister more than legitimate? Supreme Court condemned to Tamil Nadu government, அமைச்சர் சட்டவிதிகளுக்கு மேலானவரா? உச்சநீதி மன்றம் தமிழகஅரசுக்கு சாட்டையடி
-=-