சென்னை:

காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே; நிஜ வாழ்வில் இல்லை என்று மாநில மனித உரிமை ஆணையம் கடுமையாக சாடியுள்ளது.

விபத்தில் சிக்கிய சகோதரனை காக்க சென்ற தன்னை தகாத வார்த்தையில் தீட்டி கன்னத்தில் தாக்கியதாக இன்ஸ்பெக்டர் சந்துரு மீது மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட, காவல் துறையை கடுமையாக சாடிய மனித உரிமைகள் ஆணையம், புகார் அளித்தவருக்கு  ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டு உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு எஸ்.ஐ. மனோகரன் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரில், சென்னை ராமாபுரம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது, அவர்களிடம்  சிக்கிய எனது  தம்பியை காப்பாற்றச் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அப்போது, என்னை வளசரவாக்கம் ஆய்வாளராக இருந்த சந்துரு தாக்கியதுடன், அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை விசாரித்து மாநில மனித உரிமை ஆணையம், விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கி யது. அதில், மனோகரனுக்கு ரூ.25 ஆயிரம்  அபராதம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டதுடன், அந்த அபராத தொகையை  ஆய்வாளர் சந்துருவின் சம்பள தொகையிலிருந்து பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டது.

மேலும்,காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறிக்கொள்ளும் காவல்துறை, அதை வெறும்  காகித அளவில் மட்டுமே செயல்படுத்தி வருகிறது,  நிஜ வாழ்வில் இல்லை’ என்று சாடியதுடன், காவல்துறையையும் கடுமையாக  குற்றம் சாட்டியுள்ளது.