விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என்று இந்துமுன்னணி அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டுள்ள தகவல் காரணமா, விநாயகர்சதுர்த்தி அன்று தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த இந்து அமைப்புகள் திட்டமிடு கிறதோ என்ற அச்சத்தை  உருவாக்கி உள்ளது.

வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் மாநில அரசு அனுமதி வழங்கும். ஆனால்,  தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடைவிதித்துள்ளது.

ஆனால், இந்து முன்னணி சார்பில், தடை மீறி தமிழகத்தில் 1லட்சத்து 50ஆயிரம் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்பட இந்து அமைப்பினர், விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால், தமிழக அரசு பிடிவாதமாக தடையை விலக்க முடியாது என்று அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விவகாரம் சர்ச்சையைகி உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தல், டாஸ்மாக் மதுக்கடை கள் திறக்க  அனுமதி வழங்கிய அரசு, சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்? இந்து அமைப்பினர் கேள்வி விடுத்துள்ளனர்.

அதுபோல, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரனும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அனுமதி மறுப்பதில் உள்நோக்கம் உள்ளதாக  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, மனுதாரருக்கு நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பாஜக தலைவர் எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு, தமிழகத்தில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு போராட்ட காலமாகத் தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. எதையும் எதிர் கொள்வோம்.

என்று பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவை பார்க்கும் அனைவரும், தமிழகத்தில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இணைந்து கலவரத்தை  ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தமிழக காவல்துறை உடனே கவனத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில், ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.