சென்னை:

வாக்காளர் அட்டையில் பிழை உள்ளவர்கள், அந்த பிழைகளை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வாக்காளர்  முகாம்களில் திருத்திக்கொள்ளலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சரியான முறையில் இல்லாத நிலையிலும், பலரது பெயரில் எழுத்துப் பிழைகள் மற்றம் பாலினம் தவறான குறிக்கப்பட்டது போன்று எராளமான பிழைகள் உள்ளன. இதை மாற்றி தரக்கோரி ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்துள்ளன.

இந்த நிலையில், வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் படங்கள் தவறான இருத்தல், மோசன படங்கள், பழைய படங்கள் போன்றவை மாற்ற  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில்  நடைபெறும்  வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் வாக்காளர் அட்டையில் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வரும் 1ந்தேதி வெளியிடப்பட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9ந்தேதி, 23ந்தேதி மற்றும் அக்டோபர்  7ந்தேதி, 16ந்தேதி ஆகிய 4 நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.