சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்துக்களின் கடவுள் நம்பிக்கைக் குறித்து பேசிய பேச்சு, திராவிட கட்சிகளின் கொள்கைகளில் மாற்றம் நேர்ந்துள்ளதா? என்று சிந்தனையை எழுப்புகிறது.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய வைகோ, “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் கோயிலுக்கு செல்ல தேவையில்லை. ஆனால், கோயிலுக்கு செல்லும் நபர்களை கிண்டலடிக்கக் கூடாது.

எங்களுடைய கிராமத்தில், எங்கள் குடும்பத்தினரால் கட்டப்பட்ட சுந்தரபெருமாள் கோயிலை புனரமைப்பு செய்வதில் நான் பங்காற்றினேன். பலகோடி மக்கள் மதுரை மீனாட்சி கோயில், திருப்பதி, சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவற்றுக்கு செல்வதால், திராவிட சித்தாந்தத்தில் மாற்றம் தேவை. எனது கருத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்களுக்கு காலத்தின் போக்கிற்கேற்ப தனது கொள்கைகளில் சில சமரசங்களை செய்துகொண்டார். தற்போதைய நிலையில், ஆட்சியதிகாரம் சனாதன சக்திகளின் கைகளில் சென்றுவிடாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது” என்றார்.