மதுரை: 

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை எம்பி சு வெங்கடேசன் நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் பன்முகத்தன்மை இல்லாததால் அது கலைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை எம்பி சு வெங்கடேசன் இதைப்பற்றி மேலும் தெரிவித்ததாவது: இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் 16 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவில் தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இடம்பெறவில்லை. உயர் சாதியினர் மட்டுமே இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், உயர் சாதியை சார்ந்தவரே இந்த குழுவிற்கு தலைவராக உள்ளார், ஏன் விந்தியாவிற்கு கீழே இந்தியா இல்லையா? வேதங்கள் கற்றுக் கொள்வதை தவிர வேறு வாழ்க்கை முறை இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர நமக்கு வேறு மொழி இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காவியங்களை வரலாறாக சித்தரிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதா? ஒரு விமானத்திலிருந்து மண்ணின் அடியில் வேர்களை பார்க்க முடியாதது போல சாதியில் உயர்ந்தவர்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தை கணிக்கவும், முடியாது அதை பற்றி எழுதவும் முடியாது, ஆகவே இந்த குழுவை கலைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை முதல்முறையாக பேசியவர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவர், இந்த குழுவில் ஏன் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் இடம்பெறவில்லை? அவர்களால் கலாச்சாரத்தைப் பற்றி பேச முடியாது என்று நினைத்தீர்களா அல்லது அவர்கள் கலாச்சாரத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எச்டி குமாரசுவாமி இந்த குழுவில் கன்னடர்கள் அல்லது தென்னிந்தியர்கள் இடம்பெறவில்லை. ஆகவே இந்த குழு கலைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.