மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா? கண்ணீருடன் கேள்வி விடுக்கும் மருத்துவர்… வீடியோ

சென்னை:

கொரோனாவில் உயிரிழந்த  மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த துடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, மருத்துவர் சைமன். இதுதான் மக்கள் மருத்துவர்களுக்கு கொடுக்கும் பரிசா என கண்ணீரோடு கேள்வி எழுப்பி உள்ர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த பிரபல  நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று  உயிரிழந்தார்.

மருத்துவர் பாக்யராஜ்

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய காவல் துறையினரின் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்துச் சென்ற போது, அந்தப் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . பின்பு அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை அறிந்து அந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின்போது, மருத்துவர் உடலை எடுத்து வந்தவர்கள் மீது கற்கள் கம்புகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து, அவருடன் பணியாற்றிய மருத்துவர் பாக்யராஜ் தனது மன வேதனையையும், பொதுமக்களின் அறியாமையும் கண்ணீரோடு வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், கொரோனா குறித்து மீடியாக்களில் வெளியாகும் செய்தி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், நேற்று இறந்த நரம்பியல் நிபுணர் சைமன் கொரோனா வைரசால் இறந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்தோம். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்யுதம், அவரதுஉடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்து பிரச்சினை ஏற்படுத்தினர்.

ஒரு சிறந்த மருத்துவரை அடக்கம் செய்யக்கூட மக்கள் அனுமதிக்கவில்லை. ஒரு தலைசிறந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பதுகூட தெரியவில்லை.  அவர் யாருக்கும் சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் நேற்று முழுவதும் லோ லோ என்று அலைந்தோம்.  அவரது உடலை  அடக்க்ம செய்யலாம் என்ற சென்ற இடத்தில் சுமார் 50 பேர் அடியாட்கள் போல் வந்து தங்களிடம் தகராறு ஏற்படுத்தி, கம்பு கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்தினர்.

எங்களுடன் வந்த சானிடரி இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அப்படியே பாடியே போட்டுட்டு ஓடிவந்தோம்… அந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்…

அதன்பிறகு வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து இறுதி அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவப் பணிகளில் உள்ள மருத்துவர்கள் இந்த நோயினால் இறக்க நேரிட்டால், இதுதான் நிலைமையா? மக்கள் கொடுக்கும் பரிசு இதுவா?  எப்படி மருத்துவர்கள் பாதுகாப்பு…

இந்த  நிகழ்வைக் கண்டு தான் வருத்தப்படுகிறேன்… அவரை காப்பாற்ற முடியாத , அவரு உடலை புதைக்கக்கூடாட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. 

எதற்காக இந்த மருத்துவப்பணிக்கு வந்தோம் என்று வெட்கப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இனிமேலாவது அரசும், மீடியாக்களும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  தயவு செய்து மீடியாக்கள் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்…

இவ்வாறு மருத்துவர் பாக்யராஜ் கண்ணீரோடு கூறி உள்ளார். அவரது வீடியோ வைரலாகி வருகிறது.