பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியது இவரா…?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டிவிட்டது. ஃபினாலேவிற்கு தயாராகி வருகின்றனர் போட்டியாளர்கள்.ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி தவிர மற்ற 16 போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டின் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றது. பொங்கல் வைத்து பாரம்பரிய உடை அணிந்து சூப்பராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். உறியடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற விளையாட்டு போட்டிகளையும் விளையாடி பொங்கலை கொண்டாடி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் போக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் தொடங்கி ஐந்து லட்சம் வரை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனுப்பப்படும். அதை எடுத்துக்கொண்டு வெளியில் போகிறவர்கள் போகலாம் என வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆரி அந்த பெட்டிக்கு அருகில் சென்று நிற்பதும் இந்த ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

ஐந்து லட்சம் எடுத்து கொண்டு கேபி வெளியேறியுள்ளார் என்பதை மூன்றாவது ப்ரோமோவில் யூகிக்கமுடிகிறது.