இதுதான் அரசியல் அறிவா?

நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு….

ந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக கமலைப் போலீசார் விசாரணைக்கு அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் ஸ்ரீபிரியா கூறுகிறார்..

போலீசார் ஒருவரை விசாரணைக்கு அழைத்தால் இருவிதமாக பொருளுண்டு. ஒன்று குற்றவாளிகள் தரப்பு.. இன்னொன்று சாட்சியங்கள் தரப்பு.. இது கூட ஒரு கட்சியின் செயலாளருக்கு தெரியவில்லை..

இரண்டாவது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு நாயகன் என்ற ரோலை தவிர வேறு எதுவுமே கிடையாது என்று ஸ்ரீபிரியா கூறுகிறார்..

அப்படி என்றால் கமல் என்பவர் படத்தின் சகல விஷயங்களிலும் தலையிட்டு அறிவுரை சொல்லக் கூடிய, காட்சிகளை மெருகேற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய டெக்னீசியன் இல்லையா?