அமெரிக்க அதிபருக்கு கொரோனா  பரிசோதனை நடந்ததா ?

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை நடந்ததா என்பது குறித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.   அதில் அமெரிக்காவும் ஒன்றாகும்.  இந்த வைரஸால் அமெரிக்காவில் சுமார் 700க்கும்   மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 36 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதையொட்டி ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்

அதிபர் டிரம்ப் பங்கேற்ற ஒரு மாநாட்டில் கலந்துக் கொண்டவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியாக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   இதனால் டிரம்புக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் அவருக்குச் சோதனை நடந்ததா எனக் கேள்விகள் எழுந்தன.

அதிபர் சார்பில் வெள்ளை மாளிகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றியது குறித்த எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.   எனவே அவருக்குச் சோதனை எதுவும் நடத்தவில்லை/  அதிபர் டிரம்ப் உடல் நலம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.