சசிக்கு சலுகை: டிடிவி ஆதரவு புகழேந்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்று ஆஜர்! கைதாவாரா?

பெங்களூரு :

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சிறப்பு வசதி செய்துதர ரூ.2 கோடி ரூபாய்  லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரின்  டிடிவி ஆதரவாளன பெங்களூரு  புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து,பெங்களூரு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைத்ததை தொடர்ந்து,  விளக்கம் அளிக்க பெங்களூரு லஞ்ச ஒழிப்பு துறையில் இன்று காலை 11மணிக்கு புகழேந்தி ஆஜராகிறார். விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அங்கிருந்து வரும் உறுதிப்படாத  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவிற்கு சிறையில்  சலுகைகள் வழங்க சிறைத்துறை டிஜிபுக்கு ரூ.2கோடி லஞ்சம் கொடுத்ததாக புகழேந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்  சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைத்துறை டிஜிபிக்கு ரூ.2 கோடி லஞ்சமாக கொடுத்து, சிறையில் தேவையான வசதிகளை  பெருக்கிக்கொண்டதாக, சிறையை ஆய்வுசெய்த டி.ஐ.ஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து, அப்போதைய சிறைத் துறை டிஜிபி மறுப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக அப்போதைய  முதல்வர் சித்தராமையா உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

உயர்மட்டக்குழுவினர் ஏற்கனவே விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், அது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரூ.2 கோடி லஞ்ச புகாரில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் பெங்களூரு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முன்பு புகழேந்தி ஆஜராகிறார்.

இன்று அவரிடம் நடைபெற உள்ள விசாரணையை தொடர்ந்து, அவர் கைது செய்யப்படுவாரா? அல்லது அவரிடம் பெறும் வாக்குமூலத்தை தொடர்ந்து விசாரணை வளையம் விரிவாகுமா என்பது குறித்து விரைவில தெரிய வரும்.