சசிகலா அணிக்கு இரட்டைஇலை? இதுவரை 4லட்சம் பிரம்மான பத்திரம் தாக்கல்!

டில்லி,

சிகலா அணி சார்பில் இதுவரை ஏறக்குறைய 4 லட்சம் பிரம்மான பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கப்பட்ட விவகாரத்தில், சசிகலா அணியினர் இன்று  47,151 பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணியாக பிளவு பட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இதையடுத்து, ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறி இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இதைத்தொடர்ந்து  தலைமை தேர்தல் ஆணையம் இரு அணிகளும்  ஜூன் 16-ம் தேதிக்குள் பிரம்மான பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஓ.பி.எஸ் அணி சார்பாக கடந்த மார்ச் 2ம் தேதி தேர்தல் ஆணையத்திடம்,  6000 பேரின்  பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர். அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி,மீண்டும் 6500 பேரரின் பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த மே 12ம் தேதி ஓ.பி.எஸ் அணி தரப்பில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மீண்டும் 12,600 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தனர்.

இதையடுத்து ஓ.பி.எஸ். அணி சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த பட்டியலின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்தது. மேலும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிராமண பத்திரங்களை மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் ஆகியோர் மே 29ம் தேதி தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியினரும், கடந்த மே 30ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் 75,000 பிராமண பத்திரங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

இதுவரை சசிகலா அணி சார்பில் 3 லட்சத்து 10 ஆயிரம் பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ம் தேதி 4வது முறையாக சசிகலா அணி சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் 1 லட்சத்து 52 ஆயிரம் பிராமண பத்திரங்களை 4 லாரிகளில் டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று  5வது முறையாக இன்று 47,151 பிரம்மான பத்திரங்களை தேர்தல் ஆணையடத்திடம் தாக்கல் செய்துள்ளது.

சசிகலா அணி இதுவரை மொத்தம் 3,98,632 பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் கமிஷன் பிரம்மான பத்திர எண்ணிக்கையை வைத்து முடிவு எடுத்தால், சசிகலா அணியினருக்கே இரட்டை இலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.