மீண்டும் களமிறங்கும் சென்னை அணிக்கு தூதர்களாகும் விஜய்-நயன் ஜோடி?

Is Vijay – Nayanthara Again The Brand Ambassadors  For CSK?

 

ஐபிஎல் தொடரில் தடைவிதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் களமிறங்க இருக்கிறது. அந்த அணியின் நிர்வாகம் மகேந்திர சிங் டோனியை அணிக்கு மீண்டும் அழைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இருமுறை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர் என்பதால் தோனியே, சென்னை அணியின் முக்கிய டார்க்கெட்.

 

மீண்டும் களமிறங்கும்போது ஒரு பலமான அணியை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது சென்னை அணி. வெற்றிக்கு வீரர்கள் எத்தனை முக்கியமோ அதே அளவிற்கு அணியை பிரபலப்படுத்த தூதருக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் அணிகள் தொடங்கப்பட்டபோது சென்னை அணியின் தூதர்களாக நடிகர் விஜய்யும், நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர். சென்னை அணி பிரபலமானதில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் மீண்டும் களமிறங்க உள்ள சென்னை அணிக்கு தூதராக, விஜய் மற்றும் நயன்தாராவிடம் சென்னை அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.